இந்துசமய அறநெறிக்கல்வி கொடி தினம் 2017

243 0
அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் தேசிய இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் அறநெறி பாடசாலைகள் ஏற்பாடு செய்திருந்த இந்துசமய அறநெறிக்கல்வி கொடி தினமும் அமைதி ஊர்வலமும் இன்று காலை 8.30 மணிக்கு கரைத்துரைபற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து கரைச்சி குடியிருப்பு வீரகத்தி பிள்ளையார் அறநெறிப் பாடசாலையினை சென்றடைந்தது.
இவ் நிகழ்வில் வட்டுவாகல், கள்ளப்பாடு, சிலாவத்தை, கரைச்சிகுடியிருப்பு, ஆதிவைரவர் அறநெறிப்பாடசாலைகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துக்கொண்டதுடன் வீதிகளில் பயணித்தவர்களுக்கு அறநெறி கல்வியின் மகத்துவத்தை பிரதிபலிக்கும் முகமாக கொடிகளும் மாணவர்களினால் குத்திவிடப்பட்டது.
இவ் தேசிய இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரமானது ஜுன் மாதம் 10ம் திகதி முதல் 16ம் திகதி வரை நாடளாவிய ரீதியாக வருடாந்தம் நடத்தப்படுவது குறிப்பிட்ட தக்கது.

Leave a comment