புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இலங்கை சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெறவுள்ளது.
இதன்போது புதிய அரசிலமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இலங்கை சுதந்திரக் கட்சி மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சனயாப்பா, தயாசிறி ஜயசேகர, சரத் அமனுகம மற்றும் துமிந்த திசாநாயக்க இவற்றியல் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

