டெனிஸ்வரன் ,சத்தியலிங்கம் தொடர்பான முதலமைச்சரின் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்- சுமந்திரன்

266 0

விசாரணைக் குழுவின் அறிக்கையில் குற்றவாளிகளாக குறிப்பிடப்படாத வடக்கு மாகாண சபையின் இரண்டு அமைச்சர்கள் தொடர்பிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரானால் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையில் எழுந்துள்ள குழப்பநிலை தொடர்பில் டெனிஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் தொடர்பான முதலமைச்சரின் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வியமைச்சர் த.குருகுலராசா ஆகிய இருவர் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதேவேளை மற்றைய இரண்டு அமைச்சர்களான டெனிஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்க, முறைப்பாட்டாளர்கள் விசாரணைக்குழு முன் வருகை தராமையினால் அவர்கள் இருவரையும் விசாரணையில் இருந்து விடுவிக்க அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இவர்கள் இருவருக்கும் எதிராக புதிய விசாரணை நடைபெறும் என்று கூறியுள்ள முதலமைச்சர், விசாரணை முடிவடையும் வரை இரு அமைச்சர்களும் விடுமுறையில் விலகி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a comment