ஜெர்மனியின் மறு இணைப்பிற்கு முன்நின்ற ஹெல்முட் கோல் காலமானார்

391 0

ஜெர்மனியின் மறு இணைப்பிற்கு காரணகர்த்தாவான ஜெர்மனியின் முன்னாள் வேந்தர் ஹெல்முட் கோல் (87) அவரது வீட்டில் காலமானார்.

ஜெர்மனியின் கம்பீரமான வேந்தர் என்றழைக்கப்படும் ஜெர்மனியின் முன்னாள் வேந்தர் ஹெல்முட் கோல் (87) காலமானார். இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட பனிப்போரால் இரண்டாகப் பிரிந்த ஜெர்மனியை தனது போராட்டத்தால் மீண்டும் இணைத்த பெருமை கோலையே சாரும்.

இவரது முயற்சியால் சுமார் 44 ஆண்டுகளாக (1945-1989) பிரிந்து இருந்த ஜெர்மனி மீண்டும் இணைந்தது. ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமைக்காக அவர் ஒரு முரட்டுத்தனமான முயற்சியை மேற்கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அதன் பலனாக அவரது ஆட்சிக் காலத்தில் கடந்த 1989-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இரண்டாகப் பிரிக்கப்பட்ட பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு இருநாடுகளும் மீண்டும் ஒன்றாகின.

கடந்த (1982 – 1998) வரை 16 வருடங்கள் ஜெர்மனியின் வேந்தராக இருந்த ஹெல்முட் கோல் லட்விக்‌ஷாபனில் உள்ள அவரது வீட்டில் காலமானார். கோலின் மறைவுக்கு அவர் தலைவராக இருந்த கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி அதன் டுவிட்டர் பக்கத்தில், வருத்தத்தில் இருப்பதாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

Leave a comment