வைத்தியர்களுக்கு 2ஆம் மொழி அறிவு கட்டாயமாக்கப்படவேண்டும்!

379 0

gmoa-720x480வைத்தியர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ்மொழி அறிவு அத்தியாவசியமானதாகும். இதன் அடிப்படையில் அரச வைத்தியர்களுக்கு இரண்டாம்மொழி அறிவு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை இணங்கண்டு அதனை கட்டாயமாக்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான மும்மொழிக்கொள்கை மற்றும் மும்மொழி அவசியம் தொடர்பான சட்டமூலம் 2013ஆம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது. இருந்தபோதிலும் இச்சட்டமானது வைத்தியர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானதாகும்.

வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தொழில் புரியும் சிங்கள வைத்தியர்களுக்கு தமிழ் தெரியாததால் பாரியளவில் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். அதேபோல்தான் தென் பகுதியில் கடமையாற்றும் தமிழ் வைத்தியர்களும் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.

இதனை நிவர்த்திசெய்யும் நோக்கில் NITLAD என்ற தனியார் நிறுவனம் வைத்தியர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சியை வழங்கிவந்தது.

ஆனால் தற்போது சுகாதார அமைச்சுக்கும் குறித்த தனியார் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அப்பயிற்சி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மீண்டும் சுகாதார அமைச்சின் கண்காணிப்பின்கீழ் அந்த நிறுவனத்தை மீண்டும் இயங்கச்செய்யவேண்டுமெனவும்  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.