சீரற்ற காலநிலையினால் பரீட்சை சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு ஒரு நாள் சேவையின் கீழ் சான்றிதழ்களை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பரீட்சை சுட்டெண்ணை வழங்குவதன் மூலம் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் தினம் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்

