இன்றும் நீதிமன்றில் ஆஜராகவில்லை கலகொட

351 0

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பொதுபலசேனா அமைப்பின்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகவில்லை.

மேற்படி வழக்கில் கடந்த 24ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகவிருந்த ஞானசார தேரர் சமுகமளிக்கவில்லை.

உடல் நிலை காரணமாகவே அவர் சமுகமளிக்கவில்லை என்று அவரது தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, மருத்துவச் சான்றுகளுடன் இன்று ஞானசார தேரர் நீதிமன்றில் பிரசன்னமாக வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

திர்வரும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, இன வெறுப்புப் பேச்சுக்கள் மூலம் இனங்களுக்கிடையேயான ஒற்றுமையைக் குலைக்க முயற்சி செய்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் பேரில், பொலிசார் பல குழுக்களாக பிரிந்து ஞானசார தேரரை கைது செய்ய நடவடிக்கைகளை மேட்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.