வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளுக்கு உடனடியாக பிரவேசிக்க வேண்டாம்

382 0

கடும்மழை ஓரளவிற்கு குறைவடைந்தபோதிலும் அனர்த்த நிலை இன்னும் தணியவில்லை என்று இடர்முகாமைத்தவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இது தொடர்பாக தெரிவிக்கையில் வெள்ளம் குறைவடைந்தபோதிலும் அனர்த்த நிலைக்கு பின்னர் நதிக்கருகாமையில் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளுக்கு செல்வது மேலும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இதே போன்று வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளுக்கு உடனடியாக பிரவேசிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இடர் அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதையும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.