Breaking News
Home / காணொளி / மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கைநெறி தொடர்பான செயலமர்வு(காணொளி)

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கைநெறி தொடர்பான செயலமர்வு(காணொளி)

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கைநெறி தொடர்பான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடளாவிய ரீதியில், தேசிய ஊடக கற்கை நெறிகளுக்கான செயலமர்வுகளை நடாத்தி வருகிறது.

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேசிய ஊடக கற்கை நெறிக்கான செயலமர்வு இன்று நடைபெற்றது.

இந்நாட்டின் இளைஞர்களின் கல்வி, கலாசாரம், விளையாட்டு, வணிகம் மற்றும் தொழில்நுட்ப துறையிலான ஆற்றல் ஆளுமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான களங்களை அமைத்து கொடுக்கும் வகையில், தேசிய சேவைகள் மன்றம் ஊடாக குறித்த செயலமர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஊடகத்துறையில் எவ்வாறு மாணவர்களைப் பிரகாசிக்க செய்வது என்பது தொடர்பாக, பாடசாலை மாணவர்களுக்காக  ஊடக கற்கை நெறி தொடர்பான செயலமர்வு, தேசிய இளைஞர் சேவைகள்  மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஹாலிதின் ஹமீன் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கை நெறிக்கான பயிற்றுவிப்பாளராக அனுராதபுரம் மத்திய கல்லூரி அதிபரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளருமான நசீர் எம்.அஹமட், இலங்கை தமிழ் ஓசை வானொலி முகாமைத்துவ பணிப்பாளர் எ.எம்.ஜெசீம், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அறிவிப்பாளர் எஸ்.சிவராஜா ஆகியோர் இச்செயலமர்வில் வளவாளர்களாகக் கலந்து கொண்டார்கள்.

பாடசாலை மாணவர்களுக்கான ஊடக கற்கை நெறிக்கான ஆரம்ப நிகழ்வில், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற  உத்தியோகத்தர்களான கலாராணி யேசுதாசன், நிஷாந்தி அருள்மொழி, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர், யுவதிகள் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

About அனு

மேலும்

மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

ஊனம் உடலில் இல்லை மற்றவர்களின் மனதில் என்பதை உலகறிய எடுத்துக் கூறும் வண்ணமும் ஏணியை தாருங்கள் ஏற்றி விட வேண்டாம் …

Facebook Auto Publish Powered By : XYZScripts.com