பாகிஸ்தான் நிவாரணப் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

328 0

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏந்திய கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது.

முன்னதாக, இந்தியாவால் உதவிப் பொருட்களுடன் அனுப்பிய மூன்றாவது கப்பலும் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சீன அரசாங்கம் அனுப்பியுள்ள நிவாரணப் பொருட்கள் அடங்கிய மூன்று கப்பல்கள் எதிர்வரும் வியாழக்கிழமை வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.