மங்கோலியாவில் அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி தொடங்கும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மேரிகோம் கலந்து கொள்கிறார்.
கடந்த ஆண்டு நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது சுற்றில் தோல்வி கண்டு ஒலிம்பிக் தகுதி வாய்ப்பை இழந்த 5 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம் அதன் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.
ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மங்கோலியாவில் அடுத்த மாதம் (ஜூன்) 20-ந் தேதி தொடங்கும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் கலந்து கொள்கிறார்.
இது குறித்து மேரிகோம் கருத்து தெரிவிக்கையில், ‘நவம்பர் மாதம் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ உடல் எடைப்பிரிவில் கலந்து கொள்ள தயாரானாலும், இந்த போட்டியில் 51 கிலோ உடல் எடைப்பிரிவில் பங்கேற்க இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

