அனுராதபுரத்திலும் 14 பாடசாலைகளுக்கு பூட்டு

346 0

எதிர்வரும் பொசான் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுர மற்றும் கலென்பிந்துனுவெவ ஆகிய கல்வி வலயங்களிலுள்ள 14 பாடசாலைகளை ஒருவார காலம் மூடிவிடுவதற்கு வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பொசான் விழா ஏற்பாட்டுக்குழு விடுத்த வேண்டுகோளையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வகையில், குறித்த பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் 05 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.