நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 4 கைதிகள் தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.00 – 12.00 மணிக்கு இடையில் இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலையின் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் நீர்கொழும்பு சிறைச்சாலை மதிலில் துளையிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தப்பிச் சென்ற கைதிகளை மீண்டும் கைதுசெய்வது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

