நடுவானில் பிறந்த குழந்தை மரணம்

296 0

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தியில் பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

குறிப்பிட்ட திகதிக்கு முன்னரே குழந்தை பிறந்தமையே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என இரத்தினபுரி வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவானை பகுதியிலிருந்து இரத்தினபுரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உலங்குவானூர்தியில் பறக்கும் போதே குழந்தை பிறந்திருந்தது.

எனினும் குறித்த குழந்தையை பிரசவித்த தாய் நலமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.