சர்வமத பிரார்த்தனையை முன்னிட்டு பயண ஒழுங்குகள் எற்பாடு!

285 0

காணாமல் போனவர்களின் உறவுகளினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் 100ஆவது நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வமத பிரார்த்தனைகளில் கலந்துகொள்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கலாரஞ்சனி 0778087759, லீலாவதி 0778864360, ஆகியோருடனும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரலீலா 0772056093, புஸ்பாம்பாள் 0771902527 ஆகியோருடன் தொடர்புக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாலேஸ்வரி 0775530400 மற்றும் ஜெனிற்றா 0767877552, ஆகியோருடனும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உதயச்சந்திரா 0776914414, மாகிரட் 0770738257 ஆகியோருடன் தொடர்புக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விஜி 0777966187 என்பவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி பயண ஒழுங்குகளை உறுதி செய்துகொள்ளுமாறு காணாமல் போனவர்கள் சங்கத் தலைவி தெரிவித்துள்ளார்.