மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தம்

8 0

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை (01) அங்கிருந்து புறப்படும் மற்றும் அந்நாடுகளுக்குச் செல்லும் எமது அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனே முதன்மை நோக்கமாகும் என தெரிவித்துள்ளதுடன் நிலைமைகள் சீரானதும் அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

விமானப் பயணிகள் இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளலாம் எனவும்  தெரிவித்துள்ளது.