நீர்கொழும்பு – கட்டானவில் வெளிநாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

7 0

நீர்கொழும்பு பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பு பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த பிஸ்டல் ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை (28) பகல் கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமகி மாவத்தை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் 4 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டு,  அவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கி, தோட்டாக்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டறிவதற்காக கட்டான பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.