இருவேறு பகுதிகளில் கோர விபத்துகள்: முதியவர் உட்பட இருவர் பலி!

17 0

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குருநாகலை – பொல்கஹவெல பகுதியில், இடம்பெற்ற வீதிவிபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (27) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கஹவத்தை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் பாதசாரி காயமடைந்து, பொல்கஹவெல வைத்தியசாலையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது, மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பாதசாரி உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் பொல்கஹவெல பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வவுனியா – பூனாவ பகுதியில், மோட்டார் சைக்கிள், மின் கம்பத்தில் மோதி, விபத்துக்குள்ளானதில்; ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (27) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பூனாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.