மட்டக்களப்பில் காட்டு யானை தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்!

13 0

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, முனைக்காடு பகுதியில், மூன்று பெண்கள் மீது காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (27) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.