அஹுங்கல்ல- பலபிட்டிய பகுதியிலும், அம்பலாங்கொட பகுதியிலும் அஹுங்கல்ல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனைகளின் போது பெருமளவிலான போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (27) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து, 14 கிலோகிராம் 112 கிராம் ஹெரோயின் மற்றும் 13 கிலோகிராம் 32 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் பலபிட்டிய மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளைச் சேர்ந்த 41 மற்றும் 45 வயதுடைய ஆண்கள் இருவரும், அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

