அமைச்சரவை திருத்தம் சதுரங்க விளையாட்டில் காய்மாற்றம் மாத்திரமே – ஜீ எல் பீரிஸ்

325 0

அமைச்சரவை திருத்தம் என்பது சதுரங்க விளையாட்டில் காய்மாற்றங்களாக மட்டுமே அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது முன்னாள் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் இதனை தெரிவித்தார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை சீர்த்திருத்தத்தில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சின் முக்கிய நிறுவனங்களை தமது வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு சென்றுள்ளதாக ஜீ எல் பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மேற்கொள்ளும் இத்தகைய செயற்பாடுகளால் மக்கள் விரக்தியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.