பாதாளக்குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது.ஒழுங்கமைக்கப்பட்
மீரிகம பகுதியில் புதன்கிழமை (25) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலுமு; தெரிவித்ததாவது,
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. இத்தரப்பினருக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் மோதல்களின் பெறுபேறாகவே துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
அரசியல்வாதிகள் தமது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பலப்படுத்திக் கொள்வதற்காகவும் கடந்த காலங்களில் பாதாளக்குழுக்களுடன் இணக்கமாக செயற்பட்டார்கள். பாதாளக்குழுக்களுக்கு நிதி தேவைப்பட்டதால் போதைப்பொருள் வியாபாரத்துக்கான வழிமுறைகளையும் அரசியல்வாதிகள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள் அதன் விளைவாகவே பாதாளக்குழுக்களும், போதைப்பொருள் வியாபாரிகளும் பலமடைந்துள்ளார்கள்.
அண்மையில் சட்டத்தரணி ஒருவரும், அவரது மனைவியும் பாதாளக்குழுக்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள். இது கவலைக்குரியதொரு சம்பவமாகும். இந்த இரட்டை படுகொலையுடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகளும், துப்பாக்கிதாரிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பாதாளக்குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டிய தேவை காணப்படுகிறது. நடைமுறையில் உள்ள சட்டங்கள் ஊடாக அவர்கள் பாதுகாப்பு பெறுகிறார்கள். ஆகவே பாதாளக்குழுக்களை கட்டுப்படுத்துவதற்காக ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுக்கும் சட்டமூலம்’ தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த சட்டமூலம் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு,நான்கு வாரங்களில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
பாதாளக்குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களும் வெளிப்படுத்தப்படும்.நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் அப்போது தான் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும் என்றார்.

