சுவிட்சர்லாந்தில் வீடொன்றில் நிலவும் மர்மம்: திகைப்பில் நிபுணர்கள்

15 0

சுவிஸ் மாகாணமான ஜெனீவாவில், அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

திகைப்பில் நிபுணர்கள்

12 குடியிருப்புகளைக் கொண்ட அந்த கட்டிடம், 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

1360ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கட்டிடம், முன்பு மருத்துவமனையாக இருந்துள்ளது.

 

தற்போது அங்கு 12 குடும்பங்கள் வாழ்ந்துவரும் நிலையில், அந்த வீட்டில் அமைக்கப்பட்டிருந்த தூண் ஒன்று சமீபத்தில் உடைந்துபோனது. அதைத்தொடர்ந்து, சுவர்களில் கீறல் விழுந்துள்ளது.

அங்கு வாழும் மக்கள் பொறியாளர்களுக்கு தகவல் கொடுக்க, வீட்டைப் பார்வையிட்ட நிபுணர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

அந்த கட்டிடம் எப்படி கட்டப்பட்டுள்ளது, எந்தெந்த சுவர்கள் கட்டிடத்தை தாங்கி நிற்கின்றன என்பது தெரியாததால் அவர்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.

ஆக, அவற்றையெல்லாம் ஆராய்ந்து, பிறகுதான் அதை எப்படி சரி செய்வது என்ற முடிவுக்கே வரமுடியும் என்பதால், அங்கு வாழும் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

ஆக, அதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியாததால், அதுவரை அவர்கள் யாரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.