ஜேர்மனியின் மிகப்பெரிய போக்குவரத்துத் தொழிலாளர்கள் யூனியன், இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஜேர்மனியின் மிகப்பெரிய போக்குவரத்துத் தொழிலாளர்கள் யூனியனான Verdi, பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட, நாடு முழுவதுமுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.பணியாளர்களுக்கு நல்ல வேலைச்சூழல், குறைவான நேரம் வேலை, இரவுப்பணி மற்றும் வார இறுதிப்பணிக்கு ஊக்கத்தொகை, ஊதியம், நீண்ட ஓய்வு என பல்வேறு கோரிக்கைகளை யூனியன் முன்வைத்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் எதுவும் பலனளிக்கவில்லை.
ஏற்கனவே மாத துவக்கத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நாடே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், பல நகரங்களில் நான்கு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ள யூனியன் துணைத் தலைவரான Christine Behle, இதே நிலை நீடித்தால் போக்குவரத்து சேவை தொடர்ந்து செயல்பட இயலாது என்பது மேலதிகாரிகளுக்குப் புரிய மாட்டேன்கிறது என்றும் கூறியுள்ளார்.
ஆகவே, மீண்டும் மாத இறுதியில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட, நாடு முழுவதுமுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு யூனியன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

