8 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

334 0

எதிர்வரும் பல மணித்தியாலங்களுக்குள் 8 மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரத்தினபுரி, காலி, கேகாலை, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே இந்த மண்சரிவு ஆபத்து நிலவுகின்றது.

மழை குறைந்துள்ளபோதிலும் இந்த மாவட்டங்களுக்கான மண்சரிவு ஆபத்து தொடர்ந்தும் நிலவி வருகின்றது.