தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு, கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2026 டென்மார்க்.

24 0

இச் சுற்றுப்போட்டியானது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தி, அக வணக்கத்துடன் ஆரம்பமானது.
டென்மார்க் வாழ் தமிழர்களிடையேயான கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப் போட்டியாக தமிழர் விளையாட்டுத் துறையினரால், 14 ஆவது தடவையாக 21.02.2026 சனிக்கிழமை அன்று, Nyborg நகரில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் 13 அணிகள் பங்கேற்று சிறப்பித்தனர். இச் சுற்றுப் போட்டியில், நால்வரடங்கிய பிரிவு மற்றும் ஐவர் அடங்கிய  பிரிவு என இரு பிரிவுகளுக்கு, போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்ட அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டதோடு, சிறந்த வினையாட்டு வீரர்களுக்கும் சிறப்புக் கிண்ணங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

4 வீரர்கள் கொண்ட பிரிவு:

1.ஆம் இடம். Ghilli அணி
2.ஆம் இடம். Hobro Black அணி
3.ஆம் இடம். Hobro Gold அணி

இப் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரர்களாக இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வினித் Ghilli அணி மற்றும்
கனிசன் Hobro Black அணி

5 வீரர்கள் கொண்ட பிரிவு:

1.ஆம் இடம். NTSK அணி
2.ஆம் இடம். Hobro அணி
3.ஆம் இடம். Ghilli அணி

இப் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக Hobro அணியை சேர்ந்த செந்துரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இச் சுற்றுப் போட்டியில்
கலந்து சிறப்பித்த அனைத்து கழகங்களுக்கும் மற்றும் சிறப்பாக நடத்திமுடிக்க உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.