இன்று 23/02/2026 காலை அகவணக்கத்துடன் சில்லிக்காம் மாநகர சபை முன்றலில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மனு கொடுக்கப் பட்டு ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலை கடந்து ஸ்ராஸ்பூர்க் பல்கலைக்கழகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து ஸ்ராஸ்பூர்க் மாநகர உதவி முதல்வருடன் சந்திப்பு நடைபெற்று இல்கிரீச் மாநகர சபை ஊடாக எர்தைன் மாநகர முதல்வருடன் சந்திப்பு நடைபெற்று பென்பேட் மாநகர சபையில் எமது கோரிக்கை அடங்கிய மனு கொடுக்கப் பட்டு சீரற்ற காலநிலையிலும் 65 கிலோ மீற்றர்களைக் கடந்து செலட்சாட் மாநகர சபை முன்றலில் இரவு 7 மணிக்கு நிறைவுக்கு வந்தது. நாளை 24/02/2026 காலை இங்கிருந்து காலை இலக்கு நோக்கி பயணிக்கும்.
“எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல”
-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”














