அமெரிக்க தூதருக்கு பிரான்ஸ் சம்மன்

12 0

பிரான்சுக்கான அமெரிக்க தூதருக்கு பிரான்ஸ் சம்மன் அனுப்ப இருப்பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதருக்கு சம்மன்

பிப்ரவரி மாதம் 12ஆம் திகதி, பிரான்சிலுள்ள லீயோனில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த தீவிர வலதுசாரி பேரணி ஒன்றின்போது, குவென்டின் டெரான்க் (23) என்னும் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.

 

அவரது மரணம் தொடர்பில் பல்வேறு நாட்டவர்கள் விமர்சனம் முன்வைத்துவருகிறார்கள். ஆனால், அவர்கள் பிரான்ஸ் நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதாக பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துவருகிறது.

இந்நிலையில், குவெண்டின் மரணம் கவலையை ஏற்படுத்துவதாக அமெரிக்க நிர்வாகம் தரப்பில் சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது.

அமெரிக்க தூதருக்கு பிரான்ஸ் சம்மன்: பின்னணி | France Summon Us Ambassador For Comment Over Death

அதைத் தொடர்ந்து, பிரான்சுக்கான அமெரிக்க தூதரான சார்லஸ் குஷ்னருக்கு பிரான்ஸ் சம்மன் அனுப்ப இருப்பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரான ஜீன் நோயல் பாரட் தெரிவித்துள்ளார்.