விமானத்தில் சீன நாட்டு சிறுமி ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்!

12 0

மலேசியாவில் இருந்து இலங்கை நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானத்தில் சீன நாட்டு சிறுமி ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனது குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த 16 வயது சீனச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 43 வயது சீனச் சுற்றுலா முகவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி இரவு சீதுவை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்துடன் கண்டிப் பகுதிக்குச் சுற்றுலா சென்றபோது, விமானத்தில் நடந்த சம்பவம் குறித்துத் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

 

இலங்கைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் குடும்பத்துடன் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துன்பம் | Chines Passanger Arrested In Sri Lanka

இதனையடுத்து, கண்டியில் உள்ள சுற்றுலா பொலிஸாரிடம் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய கண்டி பொலிஸார் அனைத்துத் தகவல்களையும் உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய பொலிஸ் குழுவினர், சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர். பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்துக் கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.