வட மாகாணத்தில் பின் தாங்கி வாழும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்த, அதிகளவான புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தினர் தற்போது முன்வந்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தற்போது இவ்வாறான செயற் திட்டங்களுக்கு முழு பங்களிப்பினையும் அரசாங்கம் வழங்கியுள்ளதை தாம் வரவேற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

