பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

13 0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு முதற்கட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை நாளை இரவு 7:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு மட்டங்களின் அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் விபரங்கள் வருமாறு:

கண்டி மாவட்டத்தின் யடிநுவர பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிலச்சரிவு அபாயம் காரணமாக உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.