“திமுக கூட்டணி ஒற்றுமையை நோக்கி நகர்கிறது. அனைவரும் கூட்டணிக்கு வர வேண்டும்” என கமலஹாசன் எம்.பி கருத்து தெரிவித்தார்.
மதுரை காந்தி மியூசியத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், ‘காந்தியை மறவோம்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி தனி விமான மூலம் மதுரை வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அதில் எனக்கும் கடமை உள்ளது. இதை மனதில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்பிக்கை உள்ளது.

