மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து – சிறுமி பலி!

5 0

கம்பளை – நாவலப்பிட்டிய வீதியின் நாகொல்ல பகுதியில், இடம்பெற்ற வாகனவிபத்தில் 03 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (20) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கம்பளை நோக்கிச்சென்ற கார், பஸ்ஸை முந்திச்செல்ல முயன்றபோது, எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் இதன்போது காயமடைந்தனர்.

இதன்போது பலத்த காயமடைந்த 03 வயது சிறுமி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கம்பளை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏத்துகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.