யட்டியாந்தோட்டை, தனகொலவத்தை பகுதியில் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த 40 வயதுடைய பெண் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் பஸ் மோதியதில் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 40 வயதுடைய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், பஸ்ஸில் பயணித்த இந்தியப் பிரஜைகள் இருவரும் காயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யட்டியாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

