சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் ஆகியோரையே சாரும்.
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்ட சவுதி அரேபியா, கட்டம் கட்டமாக சகல துறைகளிலும் முன்னேற்றமடைந்து இன்று உலகில் மிகவும் வளர்ந்த நாடாக மாறியுள்ளதைக் காண முடிகிறது.
உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் சவுதி அரேபியாவை விஞ்சும் அளவுக்கு வேறு நாடுகள் இல்லை. அந்தளவுக்கு பயங்கரவாதத்தை தங்களது நாட்டில் அடியோடு துடைத்தெரிந்த நாடாகவும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நாடுகளில் பயங்கவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கும் தேசமாகவும் விளங்குகிறது சவுதி.
அதே போன்று ஊழல் ஒழிப்பு விடயத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் நாடாக சவுதி அரேபியா திகழுகிறது. தங்களது நாட்டில் உயர்ந்தவர், அரச குடும்பம் என்று கூட பாராமல் ஊழல் செய்தவர் யாராக இருந்தாலும் அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனையைப் பெற்றுக்கொடுக்கவும் செய்கிறது சவுதி. அத்தோடு ஊழல், மோசடி செய்யப்பட்ட பல கோடி ரியாழ்களை பறிமுதல் செய்து அரசுடமையாக்கவும் சவுதி பின்நிற்கவில்லை.
அதன் பயனாக சவுதி அரேபியா பொருளாதாரத்தில் வெற்றி கண்டுள்ளது. எந்த நாட்டில் ஊழல் உள்ளதோ அந்த நாடு பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடியைச் சந்திப்பதோடு பொருளாதாரத்தில் வங்குரோத்து நிலையையும் அடையும். ஊழல் ஒழிப்பு விடயத்தில் மிகவும் கடுமையாக இருப்பதன் விளைவாக சவுதி பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ளது எனலாம்.
மத்திய கிழக்கில் அரசியல் பலம் மிக்க நாடாக விளங்கும் சவுதி, உலகளவில் பாரிய அரசியல் பங்களிப்புகளைச் செய்யும் நாடாகவும் திகழ்கிறது. பல அற்புதமான கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழும் அளவுக்கு சவுதி முன்னேறியுள்ளது. இது உலகுக்கே ஆச்சரியமான விடயமாகும். சவால்கள் பல சவுதி அரேபியாவுக்கு இருந்தாலும் அனைத்து சவால்களையும் தடைகளையும் தாண்டி சவுதி முன்னேற்றம் அடைந்து வருகிறது.
இதற்கு இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் விஷன் 2030 பாரிய பங்களிப்பு நல்குகிறது. நியோம், த லைன், நவீன திர்இய்யா, கித்திய்யா, முகஅப், அல் உலா, மன்னர் சல்மான் பார்க், முஹம்மத் பின் சல்மான் விளையாட்டரங்கம், ரியாத் விமானம், அதி நவீன ஆயுத உற்பத்திகள் போன்றன அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றின் ஊடாக உலகையே மெச்சும் அளவுக்கு பாரிய முன்னேற்றங்களை சவுதி அரேபியா கண்டு விட்டது.

