ஜேர்மனியில், கடந்த ஆண்டுகளைப்போல் இம்முறை எரிவாயு பிரச்சினை ஏற்படாது என ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எரிவாயு கையிருப்பு
ஜேர்மனியில், இந்த குளிர்காலத்தை சமாளிக்கும் அளவுக்கு போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளதாக ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஜேர்மனி ஈடுபட்டதால், ரஷ்யா ஜேர்மனிக்கு வழங்கும் எரிவாயுவின் அளவைக் குறைத்தது.
ஆனால், அதன்பின் ரஷ்யாவை சார்ந்திருப்பதை விட்டுவிட்டு, பல இயற்கை எரிவாயு நிலையங்களை அமைத்ததுடன், கத்தார், ஓமான், நோர்வே முதலான நாடுகளுடன் எரிவாயு தொடர்பான ஒப்பந்தங்களையும் செய்துகொண்டது ஜேர்மனி.
ஆக, இந்த குளிர்காலத்தில் எரிவாயு பிரச்சினை ஏற்படாது, போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளது என ஜேர்மன் பொருளாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விடயம் என்னவென்றால், 2025ஐ ஒப்பிடும்போது, 2025 இறுதி, 2026இன் துவக்க நிலவரப்படி, ஜேர்மனியிடம் எரிவாயு குறைவாகவே உள்ளது என்கின்றன சில ஊடகங்கள்!

