பிரான்சில் கடந்த வாரம் ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு பிரித்தானியர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு பிரித்தானியர் உயிரிழந்துள்ளார்.
கடந்த வாரம், பிரான்சிலுள்ள Val d’Isere என்னும் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் பனிச்சறுக்கு விளையாட ஐந்து பேர் கொண்ட ஒரு குழு ஒரு வழிகாட்டியுடன் சென்றிருந்தது.
அவர்கள் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருக்கும்போது, திடீரென பனிச்சரிவு ஏற்படவே, அவர்கள் ஆறு பேரும் பனியில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இரண்டுபேர் உடல் நசுங்கி உயிரிழந்தார்கள். அவர்கள் இருவரும் பிரித்தானியர்கள்.
மூன்றாவது பிரித்தானியர் பலி
இந்நிலையில், செவ்வாயன்று காலை, La Grave என்னுமிடத்துக்கு அருகில், நான்கு பேருடன் ஒரு பிரித்தானியர் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், அந்த பிரித்தானியரும், அவருடன் போலந்து நாட்டவர் ஒருவரும் பனியில் புதைந்து உயிரிழந்துவிட்டனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

