தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்றும், அவர்களோடு நாங்களும் இணைந்திருப்போம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திமுக – தேமுதிக கூட்டணி உறுதியானதை அடுத்து, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், திமுகவுடன் கூட்டணி அமைத்ததற்கான காரணம் குறித்து விளக்கி உள்ளார்.
அவர் தனது பேட்டியில், ‘‘முதல் முறையாக நாங்கள் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். 2011 முதல் 2026 வரை நாங்கள் அதிமுக கூட்டணியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தோம். இது உங்கள் அனைவருக்கும் தெரியும். எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியினர், இம்முறை திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

