திருகோணமலை மாவட்ட கமநல அபிவிருத்தி அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட விவசாய அமைப்புகளினால் நிதி நன்கொடை

14 0

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட விவசாய அமைப்புகளினால் 3,746,000 ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை, கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட உதவி ஆணையாளர் நேசரத்தினம் விஷ்ணுதாசனின் அறிவுறுத்தலின் பேரில்,

திருகோணமலை மாவட்ட அலுவலகத்தின் பிரதான முகாமைத்துவ சேவை அதிகாரி கந்தையா நேமிநாதன் மற்றும் மாவட்ட விவசாயிகள் அமைப்பின் தலைவர் பீ.பி. தக்ஷில தேசப்பிரிய ஆகியோர், இன்று புதன்கிழமை (18) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர்.