வத்தளை – ஹெந்தல பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படை, கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து, 9000 சிகெரெட்டுக்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபரும் வெளிநாட்டு சிகரெட்டுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

