பிரான்சில் 150 கிலோ எடையுள்ள குட்டியை ஈன்ற யானை

17 0

பிரான்சிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், யானை ஒன்று 150 கிலோ எடையுள்ள குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.

150 கிலோ எடையுள்ள குட்டி

மத்திய பிரான்சிலுள்ள Beauval என்னுமிடத்தில் அமைந்துள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் N’Dala என்னும் பெண் யானை உள்ளது. நேற்று அந்த யானை, குட்டி ஒன்றை ஈன்றது. விடயம் என்னவென்றால், அந்தக் குட்டி 150 கிலோ எடையுள்ள மிகப்பெரிய குட்டி.

ஆகவே, அதன் தாய்க்கு பிரசவம் கடினமாக இருந்துள்ளது. ஏழு மணி நேர போராட்டத்துக்குப்பின் அந்த பெண் குட்டியை ஈன்றெடுத்தது N’Dala.

அந்த யானைக் குட்டி மிக மிகப் பெரிய குட்டி என்கிறார் அந்த உயிரியல் பூங்காவின் இயக்குநரான Rodolphe Delord.