இன்று லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப்பேரொளி, ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன், ஈகைப் பேரொளி செகதீசன், ஈகைப் பேரொளி இரவிராஜா, ஈகைப் பேரொளி இரவிச்சந்திரன், ஈகைப் பேரொளி அமரேசன், ஈகைப் பேரொளி முருகதாசன், ஈகைப்பேரொளி சோதி (எ) தமிழ்வேந்தன், ஈகைப் பேரொளி சிவபிரகாசம், ஈகைப் பேரொளி கோகுல இரத்தினம், ஈகைப் பேரொளி சீனிவாசன், ஈகைப் பேரொளி சதாசிவம் சிறீதர், ஈகைப் பேரொளி ஆனந்த், , ஈகைப் பேரொளி இராஜசேகர், ஈகைப் பேரொளி பாலசுந்தரம், ஈகைப் பேரொளி மாரிமுத்து, ஈகைப் பேரொளி சிவானந்தன், ஈகைப்பேரொளி சுப்பிரமணியன், , ஈகைப் பேரொளி கிருஷ்ணமூர்த்தி, , ஈகைப் பேரொளி தழல் ஈகிசெங்கொடி, ஈகைப் பேரொளி விஜயராஜ், , ஈகைப் பேரொளி விக்ரம், ஈகைப் பேரொளி மணி, ஈகைப்பேரொளி செந்தில்குமரன் ஆகியோரின் நினைவு சுமந்து நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
அகவை 27 உடைய முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில்இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். இச்சம்பவம் இடம்பெற்று இன்றுடன்14 ம் வருடங்கள் ஆகின்றன.
இவர், 7 பக்கங்களுக்கு “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்றதலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார் இலங்கையின் உள்நாட்டுப் போரைஎல்லோரினதும் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள்சபையின் முன்றலில் 2009, பெப்ரவரி 12 தீக்குளித்து மரணமடைந்தார்.
இந்நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. மாவீரர் வீரவேங்கை விந்தனின் சகோதரர் திரு. மகேந்திரா அவர்கள் பொதுச்சுடரை ஏற்றி நிகழ்வைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்கு செயற்பாட்டாளர் திரு. செல்வன் அவர்கள் தமிழீழ தேசியக்கொடியை ஏற்றினார். ஈகைச்சுடரை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் திருமதி மணியரசன் ஆரபி அவர்கள் ஏற்றியதுடன் அகவணக்கம் இடம்பெற்றது. பின்னர் திருஉருவப்படத்திற்கு ஈகைப்பெரோளி முருகதாஷ் அவர்களின் பெற்றோர் திரு/திருமதி வர்ணகுலணசிங்கம் அவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மலர்வணக்கம் மற்றும் சுடர்வணக்கம் தொடர்ந்து கலை மற்றும் உரை நிகழ்வுகள் இடம்பெற்றன. “ஈகியர் மாவீரம்” என்ற கவிதையை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மகளிர் செயற்பாட்டாளர் திருமதி மாதுமை லோகேஸ்வரன் அவர்கள் வழங்கினார். “நீதி மறுக்கப்பட்ட நெருப்பு” என்ற தலைப்பில் செல்வி கார்த்திகா ரமேஸ் உரையாற்றினார். செல்வி அஷ்மியா சுதாகரன் அவர்களின் நடன நிகழ்ச்சி மயூரம் கலைக்கூடத்தின் நெறியாழ்கையில் அரங்கேற்றப்பட்டது. தொடர்ந்து Bristol முத்தமிழ் கல்வியகத்தைச் சேர்ந்த செல்வன் கவின் மச்சகாந்தன் அவர்கள் “ஈகைப் பேரொளி” என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆசிரியை சாமினி கண்ணன் அவர்களின் மாணவிகள் நடன நிகழ்ச்சி வழங்கினர். “ஈகையரின் மகிமை” என்ற தலைப்பில் செல்வி வர்சா ஜெயகாந்தன் உரையாற்றினார். மேலும் அக்ஷயா விமலதாசன், அபிதிகா தவகுமார், ஆரபி சுதாகரன், இனியா துசிதரன் மற்றும் ரியா மன்மதராசா ஆகியோரின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்வின் நிறைவு பகுதியில் “வெந்தணல் வேங்கையர்கள்” என்ற தலைப்பில் திரு. மகேந்திரா அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் ஒலி வடிவில் ஒலிக்கப்பட்டு உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

















