இலங்கையில் குடும்ப கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதால் இன்றைய மனித சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அழிவு இதுவாகும் என கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை லூர்து அன்னை ஆலயத்தின் 117ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடரந்து பேசிய அவர்,
இலங்கையில் குடும்ப அமைப்பு சீர்குலைவது தற்போது ஆபத்தான தொற்றுநோயின் பரவி வருகிறது. உணர்ச்சி, வெளிப்புற அழகு அல்லது ஈர்ப்பு போன்ற காரணிகளால் ஆழ்ந்த சிந்தனை இன்றி பல தம்பதிகள் திருமணத்தில் இணைந்து, குறுகிய காலத்திலேயே அந்த உறுதிப்பாட்டை கைவிடும் நிலை அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாம் வாழும் காலத்தின் மிகப்பெரிய அழிவு குடும்ப வாழ்க்கையை சீர்குலைக்கும் இந்த போக்காகும். இலங்கையிலும் இது ஆபத்தான முறையில் தொற்று நோயைப் போல பரவி வருகிறது.
திருமணம் என்பது எந்தப் பொறுப்புணர்வும் இன்றி ஒரு விளையாட்டாகக் கருதப்படும் நிலை இந்நாட்டில் உருவாகியுள்ளது. திருமணம் என்பது எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடிய விடயம் அல்ல.
அது சமூகத்தின் அடித்தளம் ஆகும். வெற்றிகரமான திருமணம் வலுவான குடும்பத்தை உருவாக்கும். வலுவான குடும்பம் பரந்த சமூக அமைப்பையும் உறுதியாக்கும் என அவர் குறிப்பிட்டார்.

