நெல் கொள்வனவுத் திட்டம்: அரசாங்கத்தினால் விலைகள் அறிவிப்பு

13 0

2025 – 2026 பெரும் போகத்திற்கான நெல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ், நெல்லுக்கான விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஏ.எம்.யு. பின்னலந்த இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கீரி சம்பா 01 கிலோகிராம் 140 ரூபாய்க்கும், சம்பா 01 கிலோகிராம் 130 ரூபாய்க்கும், நாடு 01 கிலோகிராம் 120 ரூபாய்க்கும் கொள்வனவு விலைகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நெல் கொள்வனவு நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஏ.எம்.யு. பின்னலந்த மேலும் தெரிவித்துள்ளார்.