திஸ்ஸமஹாராம நகரத்திற்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பாடசாலை பஸ்கள் மற்றும் வேன்கள் இன்று திங்கட்கிழமை (16) அவசர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இயக்கத்திற்கு தகுதியற்ற 23 பாடசாலை பஸ்கள் மற்றும் 03 வேன்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலை பஸ்கள் மற்றும் வேன்கள், தெபரவெவ ஜனாதிபதி கல்லூரிக்கு சோதனைக்காக கொண்டு வரப்பட்டதுடன், போக்குவரத்து ஆய்வாளர்களும் இந்த சோதனையில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
29 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதாகவும், அவற்றில் 26 வாகனங்கள் இயக்கத்திற்கு தகுதியற்றவை எனக் கண்டறியப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வாகனங்கள் மீண்டும் இயக்கத்திற்கு ஏற்றதாக மாற்றப்பட்டு, போக்குவரத்து ஆய்வாளரால் பரிசோதிக்கப்பட்டு, பரிசோதனையில் சீராக இருந்தால் மாத்திரமே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும் என திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

