வடக்கு மாகாண பொதுச் சேவை வெற்றிடப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

11 0

வடக்கு மாகாண பொதுச் சேவையில் நிலவும் தொழில்நுட்பவியல் சார்ந்த பதவிகளுக்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி தெரிவித்துள்ளார்.

கீழ்க்காணும் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கே விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன:

மண் பரிசோதகர் – மாகாண தொழில்நுட்பவியல் சேவை தரம் III அல்லது பயிற்சித் தரம் (அறிவித்தல் இல: R/2026/04)

ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் – வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவை தரம் III (அறிவித்தல் இல: R/2026/05)

வேலை மேற்பார்வையாளர் – வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களம் தரம் III (அறிவித்தல் இல: R/2026/06)

மேற்படி பதவிகளுக்கான போட்டிப் பரீட்சை மற்றும் விண்ணப்ப விபரங்கள் அடங்கிய முழுமையான தகவல்களை வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இல் “Exam and Recruitment Advertisement” எனும் பகுதியில் பார்வையிட முடியும்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாகத் தமது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து 2026.03.03க்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.