நுவரெலியா மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு

6 0

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை (15) தெரிவித்திருந்தனர்.

இதற்கு ஆதரவாக  நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஹட்டன் நீதவான் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்து சட்ட தரணிகள்   திங்கட்கிழமை (16) தமது கடமைகளில் இருந்து விலகியிருந்தனர்.

இதன் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக  ஸ்தம்பித்திருந்தன இதில் ஹட்டன் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் கருப்புக் கொடியை ஏற்றி நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகிருந்தனர்.

சட்டதரணிகள் வருகை தராததன் காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் மாவட்ட நீதிமன்றங்களின் சில வழக்குகள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

விசாரணைக்கு வந்திருந்த  வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆஜராக காரணத்தால் அனைத்து வழக்குகளையும் வேறு திகதி வழங்கி இது தொடர்பான வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன.