இந்திய மீனவர்கள் 25 பேர் கைது

12 0

இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் திங்கட்கிழமை (16) அதிகாலை, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

இதன்போது உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் இரண்டை கைப்பற்றி இந்திய மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மைலடி மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.