வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (பிப்.13) வெளியாகி வருகிறது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.
வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆட்சியமைக்க 151 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் பிஎன்பி தலைமையிலான 10 கட்சிகளின் கூட்டணி சுமார் 201 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடக நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதை பிஎன்பி கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்துள்ளார். தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளதகவும் அவர் கூறியுள்ளார்.

