பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் கலந்துரையாடல்

13 0

பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் கலந்துரையாடல் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவரும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தலைமையில் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி செயலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

இங்கு பெண்கள் பற்றிய தேசிய ஆணைக்குழுவின் தற்போதைய பௌதிக ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன், இதன்போது ஆணைக்குழு எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வாய்ப்பும் கிடைத்தது